Thursday, March 5, 2015

'652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' - 'மாஜி' கணினி ஆசிரியர்கள் போர்க்கொடி
'அரசுப் பள்ளிகளில், 652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' என, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில், 1999 - 2000ல், கணினி பிரிவில் பட்டம் பெற்ற, 1,880 கணினி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பின், இப்பணியில் சேர, கணினி பட்டத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 'ஏற்கனவே, 14 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஆசிரியர், 50 சதவீத மதிப்பெண் பெற்றால் நிரந்தரம் செய்யப்படுவர்' என,
அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்தேர்வில், 20 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதாக, தொகுப்பூதிய ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கினர். பின், தேர்ச்சி மதிப்பெண், 35 ஆகக் குறைக்கப்பட்டது.ஆனாலும், ஏற்கனவே பணியாற்றிய, 652 பேரும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 652 பணியிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, கடந்த, 27ம் தேதி துவங்கி நேற்று முடிந்தது.
எனவே, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டி.ஆர்.பி.,க்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் வசந்தராஜ் கூறியதாவது:பள்ளிகளில், கணினிப் பிரிவு துவங்கியது முதல், 14 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்தோம். அப்போது, பி.எட்., முடித்தவர்கள் இப்பணிக்கு வரவும் இல்லை; கணினி பற்றி படிக்கவும் இல்லை. ஆனால், அனைவரும் கணினி படித்து விட்ட நிலையில், இத்தனை காலம், குறைந்த ஊதியத்தில் உழைத்த எங்களை பணி நீக்கம் செய்வது அநீதி. எங்களுக்காகவே உருவாக்கப்பட்ட, 652 பணியிடங்களை பதிவு மூப்பில் நிரப்புவது பாரபட்சமான நடவடிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.

Thursday, February 19, 2015

பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்
ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நேற்று காலை பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது: ஆசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் போக, மீதம் உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கான 1017 இடங்கள் நிலுவையில் இருந்தன.
இந்த இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிக்க 2014ம் ஆண்டு மே 21ம் தேதி சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அந்த தேர்வில் 5000 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 920 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனங்களை வழங்கவில்லை. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் விளக்கம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ஆசிரியர் தேர்வு வாரி யம் தெரிவித்தது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
அந்த வழக் கின் விசாரணையில் 702 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 467 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது வரை பணி நியமனம் செய்யவில்லை. இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால், மாற்றுத் திறனாளிகள் டிபிஐ வளாகத்தில் உள்ள டிஆர்பி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்த திட்டமிட்டு அமர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை
தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியதாவது:
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளில் 182 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், இடையில் நிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், மிதிவண்டிகள் போன்றவற்றுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 749 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
நான்கு ஆண்டுகளில் 53 கல்லூரிகள்: கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 38 கலை அறிவியல் கல்லூரிகள், 11 பலதொழில்நுட்பவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 204 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாகவும், தமிழகத்தில் 42 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கும் 780 ஆசிரியர்கள்
மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் தற்காலிக பணியிடம் என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு பணிவரன் முறையும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவமும் வழங்கப்படும்.
ஆனால் தற்காலிக பணியிடம் என்ற வார்த்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டதால் வழக்கமாக தகுதிகாண் பருவம் வழங்கும் முதன்மை கல்வி அலுவலர்கள், "இதுகுறித்து இணை இயக்குனர்தான் வழங்க முடியும் எனவும்; இணை இயக்குனரை அணுகினால், டி.ஆர்.பி., மூலம் பணிநியமனம் செய்திருந்தால் முதல் ஓராண்டில் பணிவரன்முறையும், அடுத்து தகுதிகாண் பருவமும் வழங்கலாம். முதன்மை கல்வி அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். அவரையே அணுகுங்கள்" என்றும் கூறுவதால், மாநில அளவில் 780 ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணமுருகன் கூறுகையில், "மூன்று ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.
தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு 'பணிவரன் முறையும்' அடுத்த இரண்டு ஆண்டுகளில் 'தகுதிகாண் பருவமும்' வழங்கப்படும்.
ஆனால் 'தற்காலிக பணியிடம்' என்ற வார்த்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டதால் வழக்கமாக 'தகுதிகாண் பருவம்' வழங்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் 'இதுகுறித்து இணை இயக்குனர் தான் வழங்க முடியும்' எனவும்; இணை இயக்குனரை அணுகினால், 'டி.ஆர்.பி., மூலம் பணிநியமனம் செய்திருந்தால் முதல் ஓராண்டில் பணிவரன்முறையும், அடுத்து தகுதிகாண் பருவமும் வழங்கலாம். முதன்மை கல்வி அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். அவரையே அணுகுங்கள்' என்றும் கூறுவதால் மாநில அளவில் 780 ஆசிரியர்கள் 'தகுதிகாண் பருவம்' கிடைக்காமல் தவிக்கின்றனர்.இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணமுருகன் கூறுகையில் ''மூன்று ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் உள்ள சாரதா வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
முதல் நாள் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் உள்ள சாரதா வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
முதல் நாள் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

Saturday, January 10, 2015

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்திருந்தனர். 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தவர்களில் 1,90,966 பேர் (94.41 சதவீதம்) தேர்வு எழுதினர். இந்தத் தேர்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநிலம் முழுவதும் தேர்வு அமைதியாக நடைபெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும். அதன்பிறகு, அந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டு இறுதி விடைகள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பிப்ரவரியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளது. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்விலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், முழுமையாக இந்தத் தேர்வில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆள்மாறாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக புகைப்படங்களுடன் கூடிய விடைத்தாள்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு1.90 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு1.90 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு
ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களில், 20,02,257 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும், 499மையங்களில் இத்தேர்வு நேற்றுநடந்தது. சென்னையில், 34 மையங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.நேற்று காலை, 10:00 மணிக்கு, அனைத்து மையங்களிலும் தேர்வு துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுத்தனர்; கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.இத்தேர்வை, 1,90,966 பேர் எழுதினர். இது, 94.41 சதவீதம். 11,291 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
'கீ -ஆன்சர்' வதந்தி :நாமக்கல் பகுதியில், டி.ஆர்.பி., வினாத்தாளின் விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) வெளியானதாக, பரபரப்பு தகவல் தேர்வர்களிடம் பரவியது.இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவில் இருந்து வதந்தி பரவியது.அதாவது, வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் நிபுணர் குழுவில் உள்ள நபர்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி வினாத்தாள் எடுத்துள்ளனர். அதன் விடைக்குறிப்பு விவரங்கள், பெரும் தொகை கொடுக்கும் நபர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுத்த நபர்களை, ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு விடைக்குறிப்பு பட்டியலை கொடுத்து படிக்க வைத்துள்ளனர்.பின், புரோக்கர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், காரின் மூலம் தேர்வு மையத்திற்கு சென்றதாக கூறுகின்றனர். இருந்தும், நேற்று மதியம் வரை எவரும் சிக்கவில்லை.

Friday, January 9, 2015

நாளை நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02 லட்சம்பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. இந்நிலையில், தேர்வு குறித்து டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 32 மாவட்டங்களில், 499 மையங்களில் நடக்கிறது.

இதில், 2.02 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும், 34 மையங்களில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும்செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., அதிகாரிகள், தேர்வை நடத்தும் மண்டல அதிகாரிகளாக செயல்படுவர். பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குனர்கள், இணைஇயக்குனர்கள், 32 மாவட்டங்களுக்கும் தேர்வு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, போதுமான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, தேர்வு மைய தரை தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற தேர்வர்களுக்கு, உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, December 6, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன 2-வது தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது.அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின்விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் மீண்டும் அழைக்கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
BRTE NEWS :885 ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டது.
வழக்கின் விபரம் :
ஒவ்வொரு வருடமும் 500 BRTEs ஆசிரியர்களாக பணிமூப்பு அடிப்படையில் பள்ளிக்கு மாற்றுவது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பாதி பேரும் இவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை.
இதனை எதிர்த்து BRTs சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அதில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதன் தீர்ப்பு இன்று (4.12.2014 )வழங்கப்பட்டது.
தீர்பின் விபரம் :
885 ஆசிரியர் பயிற்றுனர்களை 15 நாட்களுக்குள் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று Education secretary,spd(ssa) director school education ஆகியோர்க்கு உத்தரவு வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாவட்ட வாரியான விவரம் வெளியீடு

Tuesday, September 9, 2014

தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம்

"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு "

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Sunday, September 7, 2014

குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்

டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது. 
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா?

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது. 

பணி நியமனத்துக்கு தடை 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்தமனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை 'அப்பீல்' மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

திங்களன்றும் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார் கே.எஸ் இரவி வேறு அமர்வுக்கு அடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு விசாரணை நடைபெறக்கூடும் எனஎதிர்பார்க்கப் படுகின்றது.
குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்
டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்
வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சினை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் “வெயிட்டேஜ்” என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், 
தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் பெரும்பாலோர் வெற்றிபெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும்அறிவர்.

அதனால்தான் இந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சமூகத்தின் மதிப்புமிக்க பணிகளை ஆற்றிவரும் ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி,சுமுகமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, September 4, 2014

பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமன தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைதமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கும், ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்கள் பணியில் சேரவும் தடை விதித்தார். அதே நேரத்தில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த தடையை விலக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நகல் இன்னும் வெளிவராத நிலையில், உத்தரவு நகல் தாக்கல் செய்யாததற்கு விலக்கு வழங்கி தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியல் இடப்படாத நிலையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வியாழக்கிழமை ஆஜராகி, ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். அவர் மேலும் வாதிடும்போது, ‘வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை.

மதுரை கிளையில் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள், ’தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் தயாராகவில்லை. எதிர் தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறியதுடன், அரசின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்’என்றனர்.