Saturday, April 12, 2014

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார். அதன் பின், சென்னை பல்கலைகழகத்தின், திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின், அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில், எம்.ஏ., பட்டம் பெற்றார். இதன் பின், பிளஸ் 2 தேர்வை, தனியாக எழுதி, தேர்ச்சி பெற்றார். 'பட்டப் படிப்பு முடிப்பதற்கு முன், பிளஸ் 2 முடிக்காததால், ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. வாரியத்தின் முடிவை எதிர்த்தும், முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, நாகமுத்து விசாரித்தார். 

கனிமொழி சார்பில், வழக்கறிஞர், தாட்சாயணி ரெட்டி ஆஜரானார். நீதிபதி, நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே, ஜோசப் இருதயராஜ் என்பவர் தொடுத்த வழக்கில், 'பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்ததை, பரிசீலிக்கலாம்' என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனவே, கனிமொழியின் விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், மனுதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் பணியில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், பரிசீலிக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள், இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.

ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின்www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 

தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரி களில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை) என 2 வகையாக இருக்கின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். 

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, 21.02.2014 அன்று காலை 10 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில், காலை, 10:00 மணி முதல், இந்த கலந்தாய்வு நடக்கும். டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்குப் பின், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு, வெளியானது. இதனால், இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், ""தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும், எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.


முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி-வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி-வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு அக் டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரி 17-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி- வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க் கிழமை வெளியிட்டது. தேர்வு செய் யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம் என்று வாரியத்தின் உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். 

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை -ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெ.. அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது. 


மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்ட தாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில், இடஒதுக்கீடுப் பிரி வினருக்கான தேர்ச்சி மதிப்பெண் ணில் 5 சதவீதம் சலுகை வழங்கி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனவே, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். சலுகை காரணமாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்ற விவரத்தை இடஒதுக்கீடு பிரிவுவாரியாக கணக் கெடுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

வெயிட்டேஜ் மார்க் மூலம் கட்ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த மார்க் 100. இதில் 60 சதவீத மதிப்பெண் தகுதித் தேர்வுக்கும், எஞ்சிய மதிப்பெண்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரி யர் பட்டயத் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


60 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கீட் டின் கீழ் முன்பு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி, தகுதித் தேர் வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக் கப்பட்டுவிட்டது. அப்போது கட்ஆப் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது. இதில் 73, 74, 75, 76, 77 கட்ஆப் மதிப்பெண்ணில் ஏராளமானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். 

ஒரே கட்ஆப் மதிப்பெண் வந்தால் தகுதித் தேர்வு மதிப்பெண் பார்க்கப்படுமா? பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களா என்ற பல்வேறு சந் தேகங்கள் சான்றிதழ் சரிபார்ப் புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக, பணிநியமனப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந் தால், பிறந்த தேதி அடிப்படையில், அதாவது வயதில் மூத்தவர்க ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

2013-2014 கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

2013-2014 கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வை நடத்தியது. இந்த காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் ஆகும். 

இந்த தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் (தமிழ் நீங்கலாக) நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. பின்னர் வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து டிசம்பர் 23-ம் தேதி தமிழ் தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

முதலில் தேர்வு முடிவு வெளியான பாடங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட தமிழ் பாடத்துக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட தற்காலிக இறுதி தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுவிட்டது. இதற்கிடையே, 2013-14-ம் கல்வி ஆண்டுக்கான 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியது. 

எனவே, இந்த 981 காலியிடங்களும் தற்போது நடத்தப்பட்ட தேர்வு முடிவு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களுக்கு அனுமதி பெறப்படுவதற்கு முன்பாகவே 2881 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிநியமன பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதால் தற்போதைய தேர்வு மூலமாக 981 காலியிடங்களை நிரப்ப முடியாது என்றும் இதற்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேற்கண்ட 981 காலிப் பணியிடங்களில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 809 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய காலியிடங்கள் ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை ஆகியவற்றின் கீழ் செயல் படும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி யிடங்களாக இருக்கக்கூடும்.