Tuesday, September 29, 2015

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு


வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, விருப்ப மாறுதலும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, பல போராட்டங்கள் நடந்தன. நமது நாளிதழிலும் செய்தி வெளியானது.
இந்நிலையில், வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, விருப்ப மாறுதல் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
நன்றிஇதுதொடர்பாக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாதவன் விடுத்துள்ள அறிக்கையில், 'இடமாறுதல் நடத்த உத்தரவிட்ட அரசு, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்

Saturday, September 12, 2015

சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கான "கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிகேவியரல் சயின்ஸ்' கல்வி மையத்தில் 2015-2016 கல்வியாண்டில் ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள இந்தமையத்தில் கற்பிக்கப்படும் இந்த முதுநிலை பட்டயப் படிப்பில் சேர, ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.படிப்பில் சேரும்போது மாணவருக்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இந்தப் படிப்பை முடித்தவர்கள் அறிவுத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களில் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றலாம்; மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பையும் பெறலாம்.இந்தப் பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், "கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸஸ்', எண் 1, முதல் தளம், டாக்டர் திருமூர்த்தி நகர் 5-ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600034' (தொ.பே. 044- 2821 2828) என்ற முகவரி,careibschennai@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.