Saturday, December 6, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன 2-வது தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது.அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின்விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் மீண்டும் அழைக்கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
BRTE NEWS :885 ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டது.
வழக்கின் விபரம் :
ஒவ்வொரு வருடமும் 500 BRTEs ஆசிரியர்களாக பணிமூப்பு அடிப்படையில் பள்ளிக்கு மாற்றுவது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பாதி பேரும் இவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை.
இதனை எதிர்த்து BRTs சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அதில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதன் தீர்ப்பு இன்று (4.12.2014 )வழங்கப்பட்டது.
தீர்பின் விபரம் :
885 ஆசிரியர் பயிற்றுனர்களை 15 நாட்களுக்குள் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று Education secretary,spd(ssa) director school education ஆகியோர்க்கு உத்தரவு வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாவட்ட வாரியான விவரம் வெளியீடு

Tuesday, September 9, 2014

தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம்

"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு "

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Sunday, September 7, 2014

குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்

டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது. 
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா?

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது. 

பணி நியமனத்துக்கு தடை 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்தமனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை 'அப்பீல்' மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

திங்களன்றும் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார் கே.எஸ் இரவி வேறு அமர்வுக்கு அடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு விசாரணை நடைபெறக்கூடும் எனஎதிர்பார்க்கப் படுகின்றது.
குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்
டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்
வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சினை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் “வெயிட்டேஜ்” என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், 
தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் பெரும்பாலோர் வெற்றிபெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும்அறிவர்.

அதனால்தான் இந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சமூகத்தின் மதிப்புமிக்க பணிகளை ஆற்றிவரும் ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி,சுமுகமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, September 4, 2014

பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமன தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைதமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கும், ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்கள் பணியில் சேரவும் தடை விதித்தார். அதே நேரத்தில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த தடையை விலக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நகல் இன்னும் வெளிவராத நிலையில், உத்தரவு நகல் தாக்கல் செய்யாததற்கு விலக்கு வழங்கி தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியல் இடப்படாத நிலையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வியாழக்கிழமை ஆஜராகி, ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். அவர் மேலும் வாதிடும்போது, ‘வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை.

மதுரை கிளையில் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள், ’தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் தயாராகவில்லை. எதிர் தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறியதுடன், அரசின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்’என்றனர்.
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.

பணி நியமனத்துக்கு தடை

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், 
தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

‘அப்பீல்’

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல் செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை ‘அப்பீல்’ மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.இதனால், தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது” என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல– நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனை களையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமை யிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற் கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மாற்றத்துக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர்

ஆசிரியர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்வதுடன், மாணவர்களையும் மாற்றத்துக்கு ஏற்ப தயார்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினச் செய்தியாக அறிவித்தார்.

ஒரு சமுதாயம் முன்னேறிச் செல்கிறது என்றால், ஆசிரியர்கள் எப்போதும் இரண்டு அடிகள் முன்னால் செல்ல வேண்டும். உலகம் முன்னேறுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு அவர்களுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, 'சமூக வளர்ச்சியில் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் என்பது ஒரு பணி அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. தன்னலமற்ற சேவை கொண்டது ஆசிரியப் பணி.

ஆசிரியர்கள் இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, மாற்றத்தை ஏற்படுத்துவது. மற்றொன்று, மாணவர்களையும் மாற்றத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது என்று பேசினார்.
72 ஆயிரம் பேரின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Wednesday, September 3, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60% மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.

அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே ஆசிரியர்களின் குற்றச்சாட்டு.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை: மனு விவரம்

உயர் நீதிமன்றத்தை அணுகியவர்களில் ஒருவர் தனது மனுவில், "நான் பி.லிட்., பி.எட். பட்டதாரி. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளேன்.

தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மட்டுமின்றி பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பணி நியமனம் செய்யப்படுகிறது.

கடந்த 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000-க்கும் குறைவான மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. ஆனால், இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது. 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு உள்ள பாடத் திட்டங்கள் கடினம், கல்வித் தரம் போதிய அளவு இல்லை போன்ற சூழ்நிலை இருந்தது.

நிலைமை அப்படியிருக்க, அப்போதைய மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால், எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tuesday, August 12, 2014

TRB : இரண்டாவது தேர்வுப் பட்டியல் உறுதி

கடந்த 10/08/2014 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் TET தாள் 2 இல் தேர்ச்சிப் பெற்ற 31 பேரில் 11,000 பேருக்கு மட்டுமே மன நிம்மதியை அளித்து மீதமுள்ளோருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அனுபவித்தை விட மேலும் துன்பத்தை அதிகப் படுத்துவதாய் அமைந்தது.
அதிலும் நூலிழையில் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்கள் மற்றவர்களை விட அதிக துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.இதை அவர்களது மனநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்.

அப்படி நூலிழையில் வாய்ப்பினை இழந்தவர்களுக்கு ஆறுதலாய் அமைய பிற்படுத்தப் பட்ட , ஆதி திராவிட நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.இதற்கான மொத்த காலிப் பணியிட விவரம் மற்றும் பாட வாரியான காலிப் பணியிடம் குறித்த விவரம் (விரைவில்) வெளியாகும்.

வழக்குகளின் நிலவரம்
ஏற்கனவே 5% தளர்விக்கு எதிரான வழக்கும்,G.O MS 71 க்கு எதிரான வழக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதே நேரத்தில் இன்றும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களையும் மேற்கண்ட வழக்குகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின்(petition) கீழ் இடம் பெரும் வகையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.அதோடு வருகின்ற 18/08/2014 அன்று இந்த மனுவின் கீழ் விசாரணை நடைபெற உள்ளது.

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 4ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்; தினமணிஆகஸ்ட் 4ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்; தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Friday, August 1, 2014

ஏன் இந்த இரட்டை அளவுகோல்!
முனைவர் ஜா.இராஜாஏன் இந்த இரட்டை அளவுகோல்!
முனைவர் ஜா.இராஜா

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் 16.07.2014 அன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேரா சிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகுறித்த அறிவிப்பினை (ADVERTISE MENT NO. 03 / 2014,DATED : 16.07. 2014) வெளியிட்டுள்ளது. பொறியியல் அல்லாத பணியிடங்கள் (கணிதம் - 25, ஆங்கிலம்-19, இயற்பியல்-21, வேதி யியல்-18) உட்பட மொத்தம் 139 பணி யிடங்களுக்கான இந்த அறிவிப்பு பட்டப்படிப்பு முடித்த தேர்வர்களுக்கும், ஆசிரி யர் இன்றித் தவிக்கும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் மகிழ்ச்சிஅளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு தமிழக அரசின் தெளிவற்ற நிலையை வெளிப் படுத்துவதோடு புதிய வழக்குகளுக்கும் வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

இதே தேர்வு வாரியம் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான 1093 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்தஅறிவிப்பினை (ADVERTISEMENT NO. 04/2013, DATED: 28.05.2013) வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, நேர்முகத் தேர்வை எதிர்நோக்கித் தேர்வர்கள் காத்திருக்கின்றனர் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும்.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மேற் குறிப்பிட்ட இரண்டு அறிவிப்புகளும் முரண்பட்ட நிலையில், இருவேறுபட்ட அளவுகோலினைக் கொண்டிருக்கிறது. அதாவது, பொறியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ‘போட்டித்தேர்வு’ மூலம் பணிநியமனத் தினைச் செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பணியிடங்களுக்குப் பட்டம், பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பணிநியமனத் தினைச் செய்யஉள்ளது.

ஆசிரியர் தேர்வு பொறியியல் கல்லூரிகளின் தரம், தேர்ச்சிவிகிதம், உட்கட்டு மானம் உள்ளிட்டவைகள் குறித்த அண்மைக்காலத் தகவல்கள்அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ள சூழலில்,பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரத்தினைப் பாதுகாக்கும் நடவடிக்கை யாகப் ‘போட்டித் தேர்வின் மூலம் பணிநியமனம்’ என இம்முடிவினை நியாயப்படுத்தக்கூடும். ‘தரம்’ என்ற அளவு கோலினை எடுத்தால் ‘அந்த தரம்’ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பொறியியல் உள்ளிட்ட எந்தப் படிப்பும் உயர்வானது மல்ல, கலை அறிவியல் உள்ளிட்ட எந்தப் படிப்பும் தாழ்வானதுமல்ல என் பதை நம் அரசுகள் நினைவில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஆகவே, ‘கல்வித்தரம்’ என்ற அளவு கோலினை முன் வைத்து பணிநியமனம் நடைபெறுமானால் அந்த நடைமுறை அனைத்து பணியிடங் களுக்கும் பொதுவான அளவுகோலாக இருக்க வேண்டும்.

மேலும், போட்டித் தேர்வுகளின் வழிப்பட்ட பணிநியமனங்கள் என்பது, பணியிடங்களின் எண்ணிக்கை குறை வாக இருக்க, போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோது அவர்களை வடிகட்டுவதற்கான ஏற் பாடே ஒழிய தரத்தினைப் பாதுகாக்கும் நடைமுறையாகாது. கூடுதலாக, போட்டித் தேர்வுகளின் மூலமே கல்வியின் தரத்தினை மேம்படுத்தமுடியும் என்ற கருத் தியல் குறித்து இன்னும் ஒருமுடிவுக்கு வராதநிலையும் இங்கு நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.போட்டித் தேர்வினைவிடுத்து, இதுபொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு நடைமுறை என வாதிட்டால், பொறியியல் கல்லூரிக்கான அறிவிப்பில் பொறியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமின்றி பொறியியல் அல்லாத பணியிடங் களான கணிதம், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் போன்ற கலை அறிவியல் பணியிடங்களுக்கான அறிவிப்பும் இடம் பெற் றுள்ளதையும் கவனத்தில் வேண்டும்.உயர்க்கல்வி பணியிடங்களான உதவிப்பேராசிரியர் பணியில் கலை அறி வியல் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுமுறை, பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுமுறை என்ற இரட்டைத்தேர்வு முறை கல்வியில் முன்னேறியதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகத் தின் கல்விக்கொள்கை எனில் அது நகைப்பிற்கு உரியதாக மாறும்.

பொறியியல் கல்லூரிப் பணியிடங் களுக்கான அறிவிப்பில் வயதுவரம்பு குறித்த அறிவிப்பும் சர்ச்சைக்கு உரியதாக அமைந்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தினை மேற்கோள்காட்டி உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பாக 35 வயதினை (1.07.2014 அன்று) நிர்ணயிக்கும் தேர்வு வாரியம், கலை அறிவியல் கல்லூரிப் பணியிடங்களுக்கான தேர்வர்களை 57வயது வரை அனுமதிக்கிறது. மேலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயதுவரம்புச் சலுகையும் மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழக அரசின் பணிநியமன அறிவிப்புகளில் போட்டியாளர் களின் வயதுவரம்பில் மிகவும் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்படுவது உண்டு.

இந்த அறிவிப்பில் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றபட்டதாரிகள் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 57 வயதுவரை தகுதியுடைய வராக இருக்கும் போது, பொறியியல் கல்லூரிகளில் பணியாற்ற மட்டும் 35 வய துக்கு மேல் தகுதியிழக்கும் நிலையை என்னவென்று குறிப்பிடுவது? இதற்குத் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் விதிமுறைகள் தான் தடை எனில் இங்கே திருத்தப் பட வேண்டியது தொழில்நுட்ப இயக்குநரகத்தின் விதிகளேயாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளே மறுபரிசீலினை செய்யப்படும் போது, தொழில்நுட்ப இயக்குநரகத் தின் அறிவிப்பு மட்டும் விதிவிலக்கல்ல. போட்டி என்பது சமானவர்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்றநமது அரசுகளின் சமூகநீதிக் கொள் கைக்கு முரணான அறிவிப்புகள் அனுமதிக்கப்படுவது சமூகநீதிக் கொள்கையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு அழகல்ல..
பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.

இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

Monday, July 21, 2014

PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்...!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு

09.05.2013
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

31.05.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 31ம் தேதி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.

14.06.2013
முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

07.07.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 1.67 லட்சம்பேர், விண்ணப்பித்தனர்.

21.07.2013
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421மையங்களில் நடந்தது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர்பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.

29.07.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை(கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

07.10.2013
தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

11.10.2013
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களின் விவரம் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

22.10.2013
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, அக். 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும்,14 இடங்களில் 2,276 பேருக்கு நடந்தது.

24.10.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான 212 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

06.11.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

23.12.2013
முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்குஅழைக்கப்பட்டனர்.

31.12.2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெற்றது.

04.01.2014
முதுகலை தமிழ் ஆசிரியர்களின், 605 பேரின் தேர்வு பட்டியலை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), வெளியிட்டது.

09.01.2014
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது; நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry) மீதமுள்ளபாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

10.01.2014
தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

17.01.2014
திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

18.02.2014
விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

21.02.2014
முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெற்றது. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, மீதமுள்ள‌ 11 பாடங்களுக்கான‌ இறுதி தேர்வு பட்டியல் எப்போது வரும் என்ற கேள்விக்கே விடைதெரியாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Thanks To
Mr.Karthik kகள்...!
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்..டி.ஆர்.பி
தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண்
கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது..எனினும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளிவரும் முன்னர் இதற்க்கான அறிவிப்பு வெளியிடப்படும். என்வே அடுத்த வார இறுதியில் தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, July 17, 2014

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம் - தினமலர்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.அடுத்த நியமனம்: நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, July 14, 2014

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822, 
கணிதம் - 911, 
இயற்பியல் - 605 
வேதியியல் - 605, 
தாவரவியல் - 260,
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வரலாறு - 3592,
புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம் தகவல்கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை சரிபார்க்கலாம்.2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.சான்று சரிபார்ப்பின்போது அரசுப் பணியில் சேர தேர்வர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை ஆசிரியர் பணி தெரிவிற்கான விண்ணப்பமாக தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளும்.
பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து, 30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது.

இணையத்தில் வெளியீடு:

இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை,www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கான காலி பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர்.

5 தேர்வுகள்:

கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு என, ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

குறை இருந்தால்...:

தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி, குறையை சரி செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால், அவர்கள், எந்த காரணம் கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது. இந்த சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்

Sunday, July 13, 2014

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB
மனுதாக்கல் செய்துள்ளது.

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை.

எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனுக்கள்நாளை(14.07.2014) நீதியரசர் சுப்பையா அவர்களால் விசாராணை செய்யப்பட உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 9, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர் பணிக்கு தேர்வு
பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.
இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
TRB PG TAMIL வழக்குகள் இன்று (09.07.14) விசாரணை

TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் இன்று (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று (09.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 39 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன

அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி எடுத்துவரும் நிலையில். இவ்வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

COURT NO. 2
HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON WEDNESDAY THE 9TH DAY OF JULY 2014 AT 10.30 A.M.
-----------------------------------------------------------------------------------------
FOR STAY IN WA(MD).1089 AND 1090/2013

39. MP(MD).1/2013 SPL. GOVT. PLEADER M/S.T.LAJAPATHI ROY
FOR CAVEATOR (R1)
WA(MD).1089 and 1090/2013
-----------------------
COURT NOTICE SERVED REG R2 andR5
------------------------------
R2. R. SANTHAKUMAR
R5. T. BALAMURUGAN
M/S.G.THALAIMUTHARASU
FOR R3 AND R4
IN BOTH PETITIONER
M/S.J.JEYAKUMARAN
M.SURESH
FOR R1 IN WA(MD).1090/2013
MP(MD).2/2013 INWA(MD).1089/13
------------------------------
COURT NOTICE
SERVED REG R5 and R8
R5 - R. SANTHAKUMAR
R8 - T. BALAMURUGAN
AND
MP(MD).1/2013 - DO -
AND To Implead
MP(MD).1/2014 M/S. P. MAHENDRAN
CONTD ...
AND
MP(MD).2/2014 M/S.P.SARAVANA KUMAR
P.KALAIYARASI BHARATHI
AND
MP(MD).3/2014 M/S.A.RAJINI

AND
MP(MD).2/2013 M/S.T.PON RAMKUMAR
M. SANKAR
AND
WP(MD).38/2014 M/S.T.M.MADASAMY

AND
WP(MD).507/2014 M/S.T. PON RAMKUMAR
M.SANKAR
AND For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1333/2014 M/S.D.VENKATESH
P.CHELLAPANDIAN
AND Interim directions
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1403/2014 M/S.M.THIRUNAVUKKARASU
V.B. SUNDARESHWAR
For Direction
MP(MD).1/2014 - DO -
For Direction
MP(MD).2/2014 - DO -
AND
WP(MD).1575/2014 M/S. LAJAPATHI ROY
S. RAJASEKAR
AND For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1589/2014 M/S.A.JAYARAMACHANDRAN
S. RAJENDRAN
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1658/2014 M/S.S.C.HEROLD SINGH
T.JEEN JOSEPH
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1720/2014 M/S.V.RAJIV RUFUS
N. SOBANABAI
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1818/2014 M/S.M.P. SENTHIL
G.VENUGOPAL
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).1882/2014 M/S S.C.HEROLD SINGH
A.JOHN XAVIER
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).2084/2014 M/S B.JEYAKUMAR
S.BALAKARTHICK
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).2213/2014 M/S J.KARL JACOB
B. BALACHANDAR
AND
WP(MD).2271/2014 M/S J.KARTHIKEYAN
S.VARATHRAJAN
CONTD ...
AND
WP(MD).2394/2014 M/S D.SELVANAYAGAM
K. SANKAR
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).4038/2014 M/S A.RAJINI
M.SENTHILKUMAR
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).3304/2014 M/S V.RAJIV RUFUS
N. SOBANABAI
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).946/2014 M/S.S.C.HEROLD SINGH R3 - THE SECRETARY
A. JOHN XAVIER TEACHERS RECRUITMENT BOARD
COLLEGE ROAD, CHENNAI-6
R1 and R2 - TAPAL DUE
PRIVATE NOTICE
--------------
PROOF NOT FILED
For Direction
MP(MD).1/2014 - DO -
AND
WP(MD).5828/2014 M/S.T.LAJAPATHI ROY
S. RAJASEKAR
For Direction
MP(MD).1/2014 - DO -

Monday, June 23, 2014

முதுகலை ஆசிரியர்களுக்கு முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டதால் மறு கலந்தாய்வு நடத்த அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூரில் நடைபெற்று மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வில் முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் கலந்தாய்வுக்கு வந்த முதுகலை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பணியிடம் மறைப்பு குறித்து அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காலிப்பணியிடங்கள் இருப்பது மட்டும் தான் கலந்தாய்வில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், கலந்தாய்வில் முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதைக் கண்டித்து கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சி.முதல்வன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

கலந்தாய்வில் தஞ்சாவூர், வல்லம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட முக்கிய பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் முதுகலை ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இது தமிழக முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகையால் இந்த கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு மறு கலந்தாய்வு, மறைக்கப்பட்ட இடங்களை வெளிப்படையாக நடத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tuesday, May 20, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இத்தேர்வு, நாளை (மே 21) காலை, 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. கல்வி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற, 1,215 பேர்; உடல் ஊனமுற்ற 3,477 பேர் என, மொத்தம், 4,692 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வி துறை இணை இயக்குனர் தகுதியிலான, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றார்
நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தேர்வுவாரியம்(டிஇடி) மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, அக்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு, நாளை(மே 21) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற 1,215 பேர், உடல் ஊனமுற்ற 3,477 பேர் என ,4,692 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு
அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.