Tuesday, May 20, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இத்தேர்வு, நாளை (மே 21) காலை, 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. கல்வி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற, 1,215 பேர்; உடல் ஊனமுற்ற 3,477 பேர் என, மொத்தம், 4,692 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வி துறை இணை இயக்குனர் தகுதியிலான, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றார்
நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தேர்வுவாரியம்(டிஇடி) மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, அக்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு, நாளை(மே 21) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற 1,215 பேர், உடல் ஊனமுற்ற 3,477 பேர் என ,4,692 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு
அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.
முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை
முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்

Thursday, May 15, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

Wednesday, May 7, 2014

'வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: பட்டதாரிகள் பாதிப்பு

ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி., உத்தரவுப்படி தான், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுகிறோம்' என்றார்.
தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு:
கர்நாடக மாநிலத்தில், நீண்ட காலமாகவே, துவக்கப் பள்ளிகளில், கன்னட மொழியில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்துகொடுக்க வேண்டும் என்ற பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று வரப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 1994ல், கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கன்னட மொழியில் தான் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படும். ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருக்கும்' என, சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, ஆங்கில பள்ளிகள் சங்கத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, சில மாதங்களுக்கு முன், இரண்டு நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்பட்ட போது, 'இந்த விவகாரத்தில், அடிப்படை சுதந்திரம் தொடர்பான அம்சங்கள் உள்ளதால், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது தான் சரியாக இருக்கும்' என தெரிவித்து, அந்த பெஞ்சிற்கு வழக்கு மாற்றப்பட்டது.அரசியல் சாசன பெஞ்சில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி லோடா மற்றும் நீதிபதிகள், பட்நாயக், முகோபாத்யாயா, தீபக் மிஸ்ரா, கலிபுல்லா ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:துவக்கப் பள்ளி படிப்பை, அந்தந்த வட்டார மொழி அல்லது தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மொழி சிறுபான்மையினரை, எந்த மாநில அரசுகளும் கட்டாயப்படுத்த முடியாது; அதற்கான அதிகாரம், மாநில அரசுகளுக்கு கிடையாது.தாய்மொழியில் தான் துவக்கப் பள்ளி பாடங்களை படிக்க வேண்டும் என வற்புறுத்துவது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவிடபட்டது.

ஆங்கில அறிவு அவசியம்
இந்த வழக்கில், கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கே.வி.தனஞ்சயா, தன் வாதத்தில் கூறியதாவது:கன்னட மொழியின் பெருமை மற்றும் சிறப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். எனினும், ஆங்கில மொழி அறிவு இருந்தால் தான், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பானதாகவும், அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பும் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே, ஆங்கில அறிவு மிகவும் அவசியம்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்தில், 90 சதவீத மக்கள், பழங்குடியின மக்கள் தான். அங்கு, அவர்களின் அடிப்படை மொழி, ஆங்கிலமாகத் தான் உள்ளது.ஆங்கிலம், வெளிநாட்டு மொழி; அதை பாதுகாக்க முடியாது; நம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியாது என்றால், வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு பாதுகாப்பு எதன் அடிப்படையில் நம் நாட்டில் வழங்கப்படுகிறது?இவ்வாறு அவர் வாதிட்டார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார், தன் வாதத்தின் போது, ''மாநில மக்களுக்கு அறிவுரை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது,'' என வாதிட்டார்; எனினும், அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

Tuesday, May 6, 2014

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, ''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Sunday, May 4, 2014

நாளை தொடங்குகிறது ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Friday, May 2, 2014

புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்
பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு
மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்
TNTET - சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம் - TRB
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன.
உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.டி.இ.டி., தேர்வில், கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பாகவும், தேர்வு முறைக்கு கடைபிடிக்கப்படும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக, டி.இ.டி., தேர்வு விவகாரம்,இடியாப்ப சிக்கலாக இருந்து வந்தது.
இந்நிலையில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும், நேற்று முன்தினம், நீதிபதி, நாகமுத்து முடித்து வைத்தார். டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 60க்கும், தேர்வரின் பிற கல்வி தகுதிகளுக்கு, 40 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படுகிறது. 'இந்த முறை அறிவியல் பூர்வமானது அல்ல. இது, தேர்வர்களிடையே, முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசு கொண்டுவந்த இந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது; பாரபட்சமானது' என, நீதிபதி, நாகமுத்து தெரிவித்துள்ளார்.
இனி கல்வித்துறை கையில்...
மேலும், 'தேர்வர்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, அறிவியல் பூர்வமான முறையை கொண்டுவர, தமிழக அரசு, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனவும் கூறி உள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்வர்களின், பிற கல்வி தகுதி மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் வழங்க, அறிவியல் பூர்வமான புதிய முறையை, கல்வித்துறை வகுக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு பட்டியல் மாறுகிறது:
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; அதே தேர்வில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தமிழக அரசு அளித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையினால், கூடுதலாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் என, மொத்தத்தில், 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 50 ஆயிரம் பேருக்கு, ஏற்கனவே, பல கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்ப்பை, டி.ஆர்.பி., முடித்துவிட்டது. இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்), 22 ஆயிரம் பேருக்கு மட்டும், இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டி உள்ளது. இந்த பணி, விரைவில் நடக்க உள்ளது. முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட, 50 ஆயிரம் பேருக்கும், 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளித்து, பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை, தமிழக அரசு, உருவாக்க உள்ளது. எனவே, புதிய தேர்வு முறையின் அடிப்படையில், 72 ஆயிரம் பேருக்கும் மதிப்பெண் அளித்து, அதனடிப்படையில், இறுதி தேர்வு பட்டியலை தயாரிக்க வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டு உள்ளது. இதனால், மேலும், காலதாமதம் ஏற்படலாம்.
டி.ஆர்.பி., கருத்து:
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், ''தேர்வர்களுடைய மதிப்பெண் விவரம், கம்ப்யூட்டரில் உள்ளது. புதிய தேர்வு முறையை உருவாக்கி, அரசாணை வெளியிடப்பட்டால், அதனடிப்படையில், மிக விரைவாக மதிப்பெண் அளித்து, இறுதி பட்டியலை தயாரித்து விடுவோம்' என, தெரிவித்தது.
சான்றிதழ் சரிபார்ப்பில் மதிப்பெண் கிடையாது:
ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கூடுதலாகதேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, மே, 6 முதல், 12ம் தேதி வரை, 28 மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த முகாமில், ஏற்கனவே உள்ள, 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளிக்க, சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்களுக்கு, டி.ஆர்.பி., உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது, 'கிரேடு' முறையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், 'தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம்' என, டி.ஆர்.பி., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்
டி.இ.டி., தேர்வில், அனைத்து வழக்குகளும் முடிந்தன: இனி எல்லாமே கல்வித்துறை கையில்...
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.
டி.இ.டி., தேர்வில், கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பாகவும், தேர்வு முறைக்கு கடைபிடிக்கப்படும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக, டி.இ.டி., தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக இருந்து வந்தது. இந்நிலையில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும், நேற்று முன்தினம், நீதிபதி, நாகமுத்து முடித்து வைத்தார். டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 60க்கும், தேர்வரின் பிற கல்வி தகுதிகளுக்கு, 40 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படுகிறது. 'இந்த முறை அறிவியல் பூர்வமானது அல்ல. இது, தேர்வர்களிடையே, முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசு கொண்டுவந்த இந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது; பாரபட்சமானது' என, நீதிபதி, நாகமுத்து தெரிவித்துள்ளார்.
இனி கல்வித்துறை கையில்...:
மேலும், 'தேர்வர்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, அறிவியல் பூர்வமான முறையை கொண்டுவர, தமிழக அரசு, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனவும் கூறி உள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்வர்களின், பிற கல்வி தகுதி மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் வழங்க, அறிவியல் பூர்வமான புதிய முறையை, கல்வித்துறை வகுக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு பட்டியல் மாறுகிறது:
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; அதே தேர்வில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தமிழக அரசு அளித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையினால், கூடுதலாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் என, மொத்தத்தில், 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 50 ஆயிரம் பேருக்கு, ஏற்கனவே, பல கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்ப்பை, டி.ஆர்.பி., முடித்துவிட்டது. இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்), 22 ஆயிரம் பேருக்கு மட்டும், இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டி உள்ளது. இந்த பணி, விரைவில் நடக்க உள்ளது. முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட, 50 ஆயிரம் பேருக்கும், 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளித்து, பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை, தமிழக அரசு, உருவாக்க உள்ளது. எனவே, புதிய தேர்வு முறையின் அடிப்படையில், 72 ஆயிரம் பேருக்கும் மதிப்பெண் அளித்து, அதனடிப்படையில், இறுதி தேர்வு பட்டியலை தயாரிக்க வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டு உள்ளது. இதனால், மேலும், காலதாமதம் ஏற்படலாம்.
டி.ஆர்.பி., கருத்து:
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், ''தேர்வர்களுடைய மதிப்பெண் விவரம், கம்ப்யூட்டரில் உள்ளது. புதிய தேர்வு முறையை உருவாக்கி, அரசாணை வெளியிடப்பட்டால், அதனடிப்படையில், மிக விரைவாக மதிப்பெண் அளித்து, இறுதி பட்டியலை தயாரித்து விடுவோம்' என, தெரிவித்தது.
சான்றிதழ் சரிபார்ப்பில் மதிப்பெண் கிடையாது:
ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, மே, 6 முதல், 12ம் தேதி வரை, 28 மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த முகாமில், ஏற்கனவே உள்ள, 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளிக்க, சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்களுக்கு, டி.ஆர்.பி., உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது, 'கிரேடு' முறையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், 'தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம்' என, டி.ஆர்.பி., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Thursday, May 1, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’
உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறை
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண், பட்டப் படிப்பு மதிப்பெண், பி.எட். மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு, பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப் படிப்பு மதிப்பெண்) அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண் சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க் நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன் அடிப்படை யிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.
மதிப்பெண் சலுகை
இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்) குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது.
இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான (சுமார் 25 ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
புதிய கட் ஆப் மார்க்
இந்நிலையில், தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப்
பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி
தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப்
இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள்.
ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் புது உத்தரவு- வெயிட்டேஜ் மதிப்பெண் முறை செல்லாது என அறிவிப்பு
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக கடந்த 5.10.2012 மற்றும் 14.2.2014 ஆகிய தேதிகளில் அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15 மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக 25 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்காக 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 10, பட்டப் படிப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 மற்றும் பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வகை செய்யப்பட்டது.
இதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். 80 முதல் 89 சதவீதம் பெற்றவர்களுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 70 முதல் 79 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 48 மதிப்பெண்களும் 60 முதல் 69 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 42 மற்றும் 55 முதல் 59 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கிடைக்கும்.
இதேபோல் 12-ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். யார் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற அடிப்படை யில் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும். இதேபோன்று பட்டதாரி ஆசிரியர் நியமனத் துக்கும் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலிருந்து இன்னொரு குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே விதமான வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை சரியானது அல்ல என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இது தொடர்பான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.நாகமுத்து, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது என்றும், இந்த முறை செல்லாது என்றும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பிலும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும்முறை தற்போது இல்லை. தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் இந்த வெயிட்டேஜ் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயற்சி படிப்பு மற்றும் தகுதித் தேர்வில் ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த முறை யானது அறிவியல் ரீதியாக சரியானதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத சலுகையை 2012-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வேறு சில மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சிக்கல்களை கடந்து ஆசிரியர் நியமனம் எப்போது?
சென்னை: பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம் ஜவ்வாக இழுக்கிறது.
ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி பல மாதங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிக்கல்
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.) இதுவரை நிறைவு பெறவில்லை. முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும் நீதிமன்ற வழக்கில் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கூறுகிறது.
இதனால் முதுகலை ஆசிரியர்கள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என தெரியாத நிலை உள்ளது. டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 6 முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதிய ஆசிரியர்கள்
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "வழக்குகள் விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை விரைந்து நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.. 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்