Saturday, May 2, 2015

ஓவியம், தையல், இசை உள்பட சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிப்பு மும்முரம்: ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டம்

சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களும், உடல்கல்வி ஆசிரியர்களும் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் முன்பு நியமிக்கப் பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்போது முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக அவர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தேர்வுக்கான பாடத் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது. தேர்வுக்கான பாடத்திட்டம் கடினமாக இருப் பதாக புகார் எழுந்தது.இந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்வில், கொள்குறிவகையில் 190 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண்வீதம் எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 5 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது (மொத்தம் 100).விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.எழுத்துத் தேர்வினை ஜூன் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்ட மிட்டுள்ளது. எனவே, இதுகுறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்வில், கொள்குறிவகையில் 190 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு அரைமதிப்பெண் வீதம் எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும் நேர்முகத்தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது