Tuesday, August 12, 2014

TRB : இரண்டாவது தேர்வுப் பட்டியல் உறுதி

கடந்த 10/08/2014 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் TET தாள் 2 இல் தேர்ச்சிப் பெற்ற 31 பேரில் 11,000 பேருக்கு மட்டுமே மன நிம்மதியை அளித்து மீதமுள்ளோருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அனுபவித்தை விட மேலும் துன்பத்தை அதிகப் படுத்துவதாய் அமைந்தது.
அதிலும் நூலிழையில் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்கள் மற்றவர்களை விட அதிக துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.இதை அவர்களது மனநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்.

அப்படி நூலிழையில் வாய்ப்பினை இழந்தவர்களுக்கு ஆறுதலாய் அமைய பிற்படுத்தப் பட்ட , ஆதி திராவிட நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.இதற்கான மொத்த காலிப் பணியிட விவரம் மற்றும் பாட வாரியான காலிப் பணியிடம் குறித்த விவரம் (விரைவில்) வெளியாகும்.

வழக்குகளின் நிலவரம்
ஏற்கனவே 5% தளர்விக்கு எதிரான வழக்கும்,G.O MS 71 க்கு எதிரான வழக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதே நேரத்தில் இன்றும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களையும் மேற்கண்ட வழக்குகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின்(petition) கீழ் இடம் பெரும் வகையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.அதோடு வருகின்ற 18/08/2014 அன்று இந்த மனுவின் கீழ் விசாரணை நடைபெற உள்ளது.

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 4ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்; தினமணிஆகஸ்ட் 4ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்; தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Friday, August 1, 2014

ஏன் இந்த இரட்டை அளவுகோல்!
முனைவர் ஜா.இராஜாஏன் இந்த இரட்டை அளவுகோல்!
முனைவர் ஜா.இராஜா

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் 16.07.2014 அன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேரா சிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகுறித்த அறிவிப்பினை (ADVERTISE MENT NO. 03 / 2014,DATED : 16.07. 2014) வெளியிட்டுள்ளது. பொறியியல் அல்லாத பணியிடங்கள் (கணிதம் - 25, ஆங்கிலம்-19, இயற்பியல்-21, வேதி யியல்-18) உட்பட மொத்தம் 139 பணி யிடங்களுக்கான இந்த அறிவிப்பு பட்டப்படிப்பு முடித்த தேர்வர்களுக்கும், ஆசிரி யர் இன்றித் தவிக்கும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் மகிழ்ச்சிஅளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு தமிழக அரசின் தெளிவற்ற நிலையை வெளிப் படுத்துவதோடு புதிய வழக்குகளுக்கும் வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

இதே தேர்வு வாரியம் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான 1093 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்தஅறிவிப்பினை (ADVERTISEMENT NO. 04/2013, DATED: 28.05.2013) வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, நேர்முகத் தேர்வை எதிர்நோக்கித் தேர்வர்கள் காத்திருக்கின்றனர் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும்.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மேற் குறிப்பிட்ட இரண்டு அறிவிப்புகளும் முரண்பட்ட நிலையில், இருவேறுபட்ட அளவுகோலினைக் கொண்டிருக்கிறது. அதாவது, பொறியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ‘போட்டித்தேர்வு’ மூலம் பணிநியமனத் தினைச் செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பணியிடங்களுக்குப் பட்டம், பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பணிநியமனத் தினைச் செய்யஉள்ளது.

ஆசிரியர் தேர்வு பொறியியல் கல்லூரிகளின் தரம், தேர்ச்சிவிகிதம், உட்கட்டு மானம் உள்ளிட்டவைகள் குறித்த அண்மைக்காலத் தகவல்கள்அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ள சூழலில்,பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரத்தினைப் பாதுகாக்கும் நடவடிக்கை யாகப் ‘போட்டித் தேர்வின் மூலம் பணிநியமனம்’ என இம்முடிவினை நியாயப்படுத்தக்கூடும். ‘தரம்’ என்ற அளவு கோலினை எடுத்தால் ‘அந்த தரம்’ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பொறியியல் உள்ளிட்ட எந்தப் படிப்பும் உயர்வானது மல்ல, கலை அறிவியல் உள்ளிட்ட எந்தப் படிப்பும் தாழ்வானதுமல்ல என் பதை நம் அரசுகள் நினைவில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஆகவே, ‘கல்வித்தரம்’ என்ற அளவு கோலினை முன் வைத்து பணிநியமனம் நடைபெறுமானால் அந்த நடைமுறை அனைத்து பணியிடங் களுக்கும் பொதுவான அளவுகோலாக இருக்க வேண்டும்.

மேலும், போட்டித் தேர்வுகளின் வழிப்பட்ட பணிநியமனங்கள் என்பது, பணியிடங்களின் எண்ணிக்கை குறை வாக இருக்க, போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோது அவர்களை வடிகட்டுவதற்கான ஏற் பாடே ஒழிய தரத்தினைப் பாதுகாக்கும் நடைமுறையாகாது. கூடுதலாக, போட்டித் தேர்வுகளின் மூலமே கல்வியின் தரத்தினை மேம்படுத்தமுடியும் என்ற கருத் தியல் குறித்து இன்னும் ஒருமுடிவுக்கு வராதநிலையும் இங்கு நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.போட்டித் தேர்வினைவிடுத்து, இதுபொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு நடைமுறை என வாதிட்டால், பொறியியல் கல்லூரிக்கான அறிவிப்பில் பொறியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமின்றி பொறியியல் அல்லாத பணியிடங் களான கணிதம், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் போன்ற கலை அறிவியல் பணியிடங்களுக்கான அறிவிப்பும் இடம் பெற் றுள்ளதையும் கவனத்தில் வேண்டும்.உயர்க்கல்வி பணியிடங்களான உதவிப்பேராசிரியர் பணியில் கலை அறி வியல் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுமுறை, பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுமுறை என்ற இரட்டைத்தேர்வு முறை கல்வியில் முன்னேறியதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகத் தின் கல்விக்கொள்கை எனில் அது நகைப்பிற்கு உரியதாக மாறும்.

பொறியியல் கல்லூரிப் பணியிடங் களுக்கான அறிவிப்பில் வயதுவரம்பு குறித்த அறிவிப்பும் சர்ச்சைக்கு உரியதாக அமைந்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தினை மேற்கோள்காட்டி உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பாக 35 வயதினை (1.07.2014 அன்று) நிர்ணயிக்கும் தேர்வு வாரியம், கலை அறிவியல் கல்லூரிப் பணியிடங்களுக்கான தேர்வர்களை 57வயது வரை அனுமதிக்கிறது. மேலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயதுவரம்புச் சலுகையும் மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழக அரசின் பணிநியமன அறிவிப்புகளில் போட்டியாளர் களின் வயதுவரம்பில் மிகவும் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்படுவது உண்டு.

இந்த அறிவிப்பில் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றபட்டதாரிகள் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 57 வயதுவரை தகுதியுடைய வராக இருக்கும் போது, பொறியியல் கல்லூரிகளில் பணியாற்ற மட்டும் 35 வய துக்கு மேல் தகுதியிழக்கும் நிலையை என்னவென்று குறிப்பிடுவது? இதற்குத் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் விதிமுறைகள் தான் தடை எனில் இங்கே திருத்தப் பட வேண்டியது தொழில்நுட்ப இயக்குநரகத்தின் விதிகளேயாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளே மறுபரிசீலினை செய்யப்படும் போது, தொழில்நுட்ப இயக்குநரகத் தின் அறிவிப்பு மட்டும் விதிவிலக்கல்ல. போட்டி என்பது சமானவர்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்றநமது அரசுகளின் சமூகநீதிக் கொள் கைக்கு முரணான அறிவிப்புகள் அனுமதிக்கப்படுவது சமூகநீதிக் கொள்கையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு அழகல்ல..
பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.

இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.