Thursday, February 19, 2015

பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்
ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நேற்று காலை பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது: ஆசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் போக, மீதம் உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கான 1017 இடங்கள் நிலுவையில் இருந்தன.
இந்த இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிக்க 2014ம் ஆண்டு மே 21ம் தேதி சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அந்த தேர்வில் 5000 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 920 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனங்களை வழங்கவில்லை. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் விளக்கம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ஆசிரியர் தேர்வு வாரி யம் தெரிவித்தது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
அந்த வழக் கின் விசாரணையில் 702 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 467 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது வரை பணி நியமனம் செய்யவில்லை. இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால், மாற்றுத் திறனாளிகள் டிபிஐ வளாகத்தில் உள்ள டிஆர்பி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்த திட்டமிட்டு அமர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை
தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியதாவது:
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளில் 182 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், இடையில் நிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், மிதிவண்டிகள் போன்றவற்றுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 749 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
நான்கு ஆண்டுகளில் 53 கல்லூரிகள்: கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 38 கலை அறிவியல் கல்லூரிகள், 11 பலதொழில்நுட்பவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 204 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாகவும், தமிழகத்தில் 42 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கும் 780 ஆசிரியர்கள்
மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் தற்காலிக பணியிடம் என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு பணிவரன் முறையும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவமும் வழங்கப்படும்.
ஆனால் தற்காலிக பணியிடம் என்ற வார்த்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டதால் வழக்கமாக தகுதிகாண் பருவம் வழங்கும் முதன்மை கல்வி அலுவலர்கள், "இதுகுறித்து இணை இயக்குனர்தான் வழங்க முடியும் எனவும்; இணை இயக்குனரை அணுகினால், டி.ஆர்.பி., மூலம் பணிநியமனம் செய்திருந்தால் முதல் ஓராண்டில் பணிவரன்முறையும், அடுத்து தகுதிகாண் பருவமும் வழங்கலாம். முதன்மை கல்வி அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். அவரையே அணுகுங்கள்" என்றும் கூறுவதால், மாநில அளவில் 780 ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணமுருகன் கூறுகையில், "மூன்று ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.
தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு 'பணிவரன் முறையும்' அடுத்த இரண்டு ஆண்டுகளில் 'தகுதிகாண் பருவமும்' வழங்கப்படும்.
ஆனால் 'தற்காலிக பணியிடம்' என்ற வார்த்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டதால் வழக்கமாக 'தகுதிகாண் பருவம்' வழங்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் 'இதுகுறித்து இணை இயக்குனர் தான் வழங்க முடியும்' எனவும்; இணை இயக்குனரை அணுகினால், 'டி.ஆர்.பி., மூலம் பணிநியமனம் செய்திருந்தால் முதல் ஓராண்டில் பணிவரன்முறையும், அடுத்து தகுதிகாண் பருவமும் வழங்கலாம். முதன்மை கல்வி அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். அவரையே அணுகுங்கள்' என்றும் கூறுவதால் மாநில அளவில் 780 ஆசிரியர்கள் 'தகுதிகாண் பருவம்' கிடைக்காமல் தவிக்கின்றனர்.இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணமுருகன் கூறுகையில் ''மூன்று ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் உள்ள சாரதா வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
முதல் நாள் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் உள்ள சாரதா வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
முதல் நாள் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்