Tuesday, September 9, 2014

தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம்

"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு "

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Sunday, September 7, 2014

குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்

டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது. 
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா?

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது. 

பணி நியமனத்துக்கு தடை 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்தமனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை 'அப்பீல்' மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

திங்களன்றும் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார் கே.எஸ் இரவி வேறு அமர்வுக்கு அடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு விசாரணை நடைபெறக்கூடும் எனஎதிர்பார்க்கப் படுகின்றது.
குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்
டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்
வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சினை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் “வெயிட்டேஜ்” என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், 
தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் பெரும்பாலோர் வெற்றிபெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும்அறிவர்.

அதனால்தான் இந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சமூகத்தின் மதிப்புமிக்க பணிகளை ஆற்றிவரும் ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி,சுமுகமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, September 4, 2014

பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமன தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைதமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கும், ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்கள் பணியில் சேரவும் தடை விதித்தார். அதே நேரத்தில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த தடையை விலக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நகல் இன்னும் வெளிவராத நிலையில், உத்தரவு நகல் தாக்கல் செய்யாததற்கு விலக்கு வழங்கி தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியல் இடப்படாத நிலையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வியாழக்கிழமை ஆஜராகி, ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். அவர் மேலும் வாதிடும்போது, ‘வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை.

மதுரை கிளையில் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள், ’தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் தயாராகவில்லை. எதிர் தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறியதுடன், அரசின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்’என்றனர்.
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.

பணி நியமனத்துக்கு தடை

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், 
தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

‘அப்பீல்’

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல் செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை ‘அப்பீல்’ மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.இதனால், தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது” என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல– நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனை களையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமை யிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற் கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மாற்றத்துக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர்

ஆசிரியர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்வதுடன், மாணவர்களையும் மாற்றத்துக்கு ஏற்ப தயார்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினச் செய்தியாக அறிவித்தார்.

ஒரு சமுதாயம் முன்னேறிச் செல்கிறது என்றால், ஆசிரியர்கள் எப்போதும் இரண்டு அடிகள் முன்னால் செல்ல வேண்டும். உலகம் முன்னேறுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு அவர்களுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, 'சமூக வளர்ச்சியில் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் என்பது ஒரு பணி அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. தன்னலமற்ற சேவை கொண்டது ஆசிரியப் பணி.

ஆசிரியர்கள் இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, மாற்றத்தை ஏற்படுத்துவது. மற்றொன்று, மாணவர்களையும் மாற்றத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது என்று பேசினார்.
72 ஆயிரம் பேரின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Wednesday, September 3, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60% மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.

அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே ஆசிரியர்களின் குற்றச்சாட்டு.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை: மனு விவரம்

உயர் நீதிமன்றத்தை அணுகியவர்களில் ஒருவர் தனது மனுவில், "நான் பி.லிட்., பி.எட். பட்டதாரி. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளேன்.

தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மட்டுமின்றி பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பணி நியமனம் செய்யப்படுகிறது.

கடந்த 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000-க்கும் குறைவான மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. ஆனால், இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது. 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு உள்ள பாடத் திட்டங்கள் கடினம், கல்வித் தரம் போதிய அளவு இல்லை போன்ற சூழ்நிலை இருந்தது.

நிலைமை அப்படியிருக்க, அப்போதைய மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால், எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.