Friday, August 1, 2014

ஏன் இந்த இரட்டை அளவுகோல்!
முனைவர் ஜா.இராஜாஏன் இந்த இரட்டை அளவுகோல்!
முனைவர் ஜா.இராஜா

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் 16.07.2014 அன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேரா சிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகுறித்த அறிவிப்பினை (ADVERTISE MENT NO. 03 / 2014,DATED : 16.07. 2014) வெளியிட்டுள்ளது. பொறியியல் அல்லாத பணியிடங்கள் (கணிதம் - 25, ஆங்கிலம்-19, இயற்பியல்-21, வேதி யியல்-18) உட்பட மொத்தம் 139 பணி யிடங்களுக்கான இந்த அறிவிப்பு பட்டப்படிப்பு முடித்த தேர்வர்களுக்கும், ஆசிரி யர் இன்றித் தவிக்கும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் மகிழ்ச்சிஅளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு தமிழக அரசின் தெளிவற்ற நிலையை வெளிப் படுத்துவதோடு புதிய வழக்குகளுக்கும் வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

இதே தேர்வு வாரியம் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான 1093 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்தஅறிவிப்பினை (ADVERTISEMENT NO. 04/2013, DATED: 28.05.2013) வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, நேர்முகத் தேர்வை எதிர்நோக்கித் தேர்வர்கள் காத்திருக்கின்றனர் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும்.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மேற் குறிப்பிட்ட இரண்டு அறிவிப்புகளும் முரண்பட்ட நிலையில், இருவேறுபட்ட அளவுகோலினைக் கொண்டிருக்கிறது. அதாவது, பொறியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ‘போட்டித்தேர்வு’ மூலம் பணிநியமனத் தினைச் செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பணியிடங்களுக்குப் பட்டம், பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பணிநியமனத் தினைச் செய்யஉள்ளது.

ஆசிரியர் தேர்வு பொறியியல் கல்லூரிகளின் தரம், தேர்ச்சிவிகிதம், உட்கட்டு மானம் உள்ளிட்டவைகள் குறித்த அண்மைக்காலத் தகவல்கள்அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ள சூழலில்,பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரத்தினைப் பாதுகாக்கும் நடவடிக்கை யாகப் ‘போட்டித் தேர்வின் மூலம் பணிநியமனம்’ என இம்முடிவினை நியாயப்படுத்தக்கூடும். ‘தரம்’ என்ற அளவு கோலினை எடுத்தால் ‘அந்த தரம்’ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பொறியியல் உள்ளிட்ட எந்தப் படிப்பும் உயர்வானது மல்ல, கலை அறிவியல் உள்ளிட்ட எந்தப் படிப்பும் தாழ்வானதுமல்ல என் பதை நம் அரசுகள் நினைவில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஆகவே, ‘கல்வித்தரம்’ என்ற அளவு கோலினை முன் வைத்து பணிநியமனம் நடைபெறுமானால் அந்த நடைமுறை அனைத்து பணியிடங் களுக்கும் பொதுவான அளவுகோலாக இருக்க வேண்டும்.

மேலும், போட்டித் தேர்வுகளின் வழிப்பட்ட பணிநியமனங்கள் என்பது, பணியிடங்களின் எண்ணிக்கை குறை வாக இருக்க, போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோது அவர்களை வடிகட்டுவதற்கான ஏற் பாடே ஒழிய தரத்தினைப் பாதுகாக்கும் நடைமுறையாகாது. கூடுதலாக, போட்டித் தேர்வுகளின் மூலமே கல்வியின் தரத்தினை மேம்படுத்தமுடியும் என்ற கருத் தியல் குறித்து இன்னும் ஒருமுடிவுக்கு வராதநிலையும் இங்கு நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.போட்டித் தேர்வினைவிடுத்து, இதுபொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு நடைமுறை என வாதிட்டால், பொறியியல் கல்லூரிக்கான அறிவிப்பில் பொறியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமின்றி பொறியியல் அல்லாத பணியிடங் களான கணிதம், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் போன்ற கலை அறிவியல் பணியிடங்களுக்கான அறிவிப்பும் இடம் பெற் றுள்ளதையும் கவனத்தில் வேண்டும்.உயர்க்கல்வி பணியிடங்களான உதவிப்பேராசிரியர் பணியில் கலை அறி வியல் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுமுறை, பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுமுறை என்ற இரட்டைத்தேர்வு முறை கல்வியில் முன்னேறியதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகத் தின் கல்விக்கொள்கை எனில் அது நகைப்பிற்கு உரியதாக மாறும்.

பொறியியல் கல்லூரிப் பணியிடங் களுக்கான அறிவிப்பில் வயதுவரம்பு குறித்த அறிவிப்பும் சர்ச்சைக்கு உரியதாக அமைந்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தினை மேற்கோள்காட்டி உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பாக 35 வயதினை (1.07.2014 அன்று) நிர்ணயிக்கும் தேர்வு வாரியம், கலை அறிவியல் கல்லூரிப் பணியிடங்களுக்கான தேர்வர்களை 57வயது வரை அனுமதிக்கிறது. மேலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயதுவரம்புச் சலுகையும் மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழக அரசின் பணிநியமன அறிவிப்புகளில் போட்டியாளர் களின் வயதுவரம்பில் மிகவும் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்படுவது உண்டு.

இந்த அறிவிப்பில் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றபட்டதாரிகள் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 57 வயதுவரை தகுதியுடைய வராக இருக்கும் போது, பொறியியல் கல்லூரிகளில் பணியாற்ற மட்டும் 35 வய துக்கு மேல் தகுதியிழக்கும் நிலையை என்னவென்று குறிப்பிடுவது? இதற்குத் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் விதிமுறைகள் தான் தடை எனில் இங்கே திருத்தப் பட வேண்டியது தொழில்நுட்ப இயக்குநரகத்தின் விதிகளேயாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளே மறுபரிசீலினை செய்யப்படும் போது, தொழில்நுட்ப இயக்குநரகத் தின் அறிவிப்பு மட்டும் விதிவிலக்கல்ல. போட்டி என்பது சமானவர்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்றநமது அரசுகளின் சமூகநீதிக் கொள் கைக்கு முரணான அறிவிப்புகள் அனுமதிக்கப்படுவது சமூகநீதிக் கொள்கையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு அழகல்ல..

No comments:

Post a Comment