Monday, May 22, 2017

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பாரபட்சம் காட்டுவதாக, தேர்வு வாரியத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச்செயலர் நம்புராஜன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

மே, 30 கடைசி நாள். இப்பணிகளுக்கு, 40 முதல், 70 சதவீதம் வரை, ஒரு கை, ஒரு கால் அல்லது இரு கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

பல்வேறு சிரமங்களுக்கு இடையே, படித்து முடித்து, வேலைக்காக காத்திருக்கும், 70 சதவீதத்துக்கு மேல் பாதித்த, கடும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் பணி வாய்ப்புகளை தடுப்பது சட்டவிரோதம். 

மாற்றுத்திறனாளிகள் துறை, 2016 அரசாணை, 13ன் படி, ஆசிரியர் பணிக்கு, 40 முதல், 70 சதவீதம் வரை பாதித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என, எந்த விதியும் இல்லை. குறிப்பாக, 4 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரிய பாரபட்ச நடவடிக்கையை தடுக்க, அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment