Tuesday, September 9, 2014

தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம்

"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு "

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment