Thursday, September 4, 2014

மாற்றத்துக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர்

ஆசிரியர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்வதுடன், மாணவர்களையும் மாற்றத்துக்கு ஏற்ப தயார்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினச் செய்தியாக அறிவித்தார்.

ஒரு சமுதாயம் முன்னேறிச் செல்கிறது என்றால், ஆசிரியர்கள் எப்போதும் இரண்டு அடிகள் முன்னால் செல்ல வேண்டும். உலகம் முன்னேறுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு அவர்களுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, 'சமூக வளர்ச்சியில் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் என்பது ஒரு பணி அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. தன்னலமற்ற சேவை கொண்டது ஆசிரியப் பணி.

ஆசிரியர்கள் இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, மாற்றத்தை ஏற்படுத்துவது. மற்றொன்று, மாணவர்களையும் மாற்றத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது என்று பேசினார்.

No comments:

Post a Comment