Sunday, September 7, 2014

குழப்பத்துடன் கவுன்சிலிங் நிறைவு: இறுதி நாளில் 25 பேர் ஆப்சன்ட்

டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த, 30ம் தேதி துவங்கியது. 
தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘கவுன்சிலிங் நடத்தலாம், பணி நியமன ஆணை வழங்கக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலிங் மட்டும் நடந்தது. இதில், 63 இடைநிலை ஆசிரியர்களில், 10 பேருக்கு திருச்சி மாவட்டத்திலும், 53 பேருக்கு வெளி மாவட்டத்திலும் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 466 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 107 பேருக்கு மாவட்டத்துக்குள் வழங்கப்பட்டது. 334 பேருக்கு வெளி மாவட்டத்துக்கான பணி நியமன ஆணை உறுதி செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று 257 பேர் வந்தனர். 25 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில், வெயிட்டேஜ் முறை குறித்து எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த கலந்தாய்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் குழப்பத்துடன் சென்றனர்

No comments:

Post a Comment